திருவிளையாட்டம் ஊராட்சி பெரம்பூர் கிராமத்தின் முக்கிய நீராதாரமாக இருக்கக்கூடியது மேலப்பெரம்பூர் குளம். கடந்த மாதம் குளம் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட நிலையில், காவிரி நீரானது இந்த குளத்திற்கு இன்னும் வந்து சேரவில்லை. இந்த குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய வாய்க்காலினை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சரிசெய்து குளத்தில் நீர்நிரப்ப இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.