சீா்காழி: பூட்டப்பட்ட பேருந்து நிலைய கழிப்பறைகளால் மக்கள் அவதி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாயில் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை வசதியானது பூட்டப்பட்டு மக்கள் பயன்பாடு இல்லாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. 

இப்பகுதி மக்களின் தேவைக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பறை பூட்டப்பட்டுள்ளதால் பேருந்து பயணத்திற்காக வரும் சுற்றுவட்டார கிராம மக்கள் கழிப்பறை வசதி இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இது குறித்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி