சீர்காழி: ஊராட்சித் தலைவா் மீண்டும் பதவியேற்பு

சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சித் தலைவர், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மீண்டும் ஊராட்சித் தலைவராக பதவி ஏற்றார். சட்டநாதபுரம் ஊராட்சித் தலைவர் தட்சிணாமூர்த்தி, ஊராட்சி நிதியில் அதிக செலவினம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 

இதனால், அவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி கடந்த 27.10.2024 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தட்சிணாமூர்த்தி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஊராட்சித் தலைவராக தட்சிணாமூர்த்தி நீடிக்கலாம் என உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் ஊராட்சித் தலைவராக பணியில் தொடர மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். இதையடுத்து, சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் முன்னிலையில், சட்டநாதபுரம் ஊராட்சித் தலைவராக தட்சிணாமூர்த்தி மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி