மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் திருமண வரம் தரும் உலகப் புகழ்பெற்ற கோகிலாம்பாள் சமேத உக்கிரவேதீஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்து கோவிலில் மாசி மகா திருவிழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழாவில் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஐந்து சேர எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகள் விக்கிரமன் ஆற்றில் மூழ்கி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.