மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட ஆனந்த தாண்டவபுரம் ஊராட்சியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாட்டு நிதியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் பங்கேற்று புதிய நிழற்குடையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஆனந்த தாண்டவபுரம் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.