குத்தாலம்: அம்மன் கோவில் பால்குட திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தெற்கு சென்னியநல்லூர் கிராமத்தில் மும்மாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் 19ஆம் ஆண்டு பால் காவடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் மஞ்சள் ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் முன் செல்ல பால் குடங்கள் மற்றும் காவடிகள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்த வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி