மயிலாடுதுறை: ரயிலில் அடிபட்டு புள்ளிமான் பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பாதரக்குடி கிராமத்தில் ரயில்வே ஸ்டேஷன் அருகே மூன்றரை வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், இறந்த மானை கைப்பற்றி சீர்காழி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து, பின்னர் கொள்ளிடம் காப்பு காட்டில் புதைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி