மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தேச விரோதிகளால் நடத்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய இடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் முக்கிய வழித்தடமான மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் பயணிகளின் உடைமைகளையும், சந்தேகத்திற்கிடமான இடங்களையும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி