மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு கூட மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.