நாகப்பட்டினம் அருகே 35 வயதான பெண், நாகை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், கூலி வேலைக்கு செல்லும் தனது கணவர், தங்களது 13 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக தெரிவித்திருந்தார்.மகளிர் போலீஸார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மகளிர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அந்த சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையிலடைத்தனர்.