நாகை: ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது

நெல்லுக்கு ஆதார விலையாக குவிண்டாலுக்கு 3500 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை துணை ராணுவத்தை வைத்து மத்திய மாநில அரசுகள் கைது செய்தது.

இதனை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட முயன்றனர்.

இதனால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி