மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ். இவர் மயிலாடுதுறை மதுவிலக்கு அமல் பிரிவிற்கு பணி மாற்றத்தில் சென்று பணியாற்ற உள்ளார். இந்நிலையில் குத்தாலம் காவல் நிலையத்தில் அவருக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் சார்பு இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், அருள்குமார் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினர்.