பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது பருத்தியை சுத்தம் செய்து, நன்கு உலர்த்தி தரமான பருத்தியை தனியாகவும் மற்ற பருத்தியினை தனியாகவும் பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், சரியான எடைக்கு அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயனடைலாம்.
பிரதிவாரம் திங்கள்கிழமை செம்பனார்கோவில் விற்பனை கூடத்தில் காலை 10 மணிக்கும், சீர்காழி விற்பனை கூடத்தில் மதியம் 2 மணிக்கும், வியாழன்தோறும் குத்தாலம் விற்பனை கூடத்தில் மதியம் 2 மணிக்கும், சனிக்கிழமை தோறும் மயிலாடுதுறை விற்பனை கூடத்தில் காலை 10 மணிக்கும் ஏலம் நடைபெறும். மேற்படி பருத்தி ஏல விவரங்களுக்கு செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்: 9042914006, மயிலாடுதுறை: 8012224723, குத்தாலம்: 8220869684, சீர்காழி: 9151448296 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.