நாகை: உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறை

மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உயர் கல்வியில் 100 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு ஆலோசனை வழங்க, மாவட்ட ஆட்சியரக 4-ஆம் தளத்தில் அறை எண் 409-இல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை 04364-220522 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு மாணவர்கள் தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், காரணங்களை அறிந்து மாவட்ட கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை எடுக்கும். 

தினசரி மாணவர் விண்ணப்ப மற்றும் சேர்க்கை நிலை முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் எமிஸ் மூலம் கண்காணிக்கப்படும். மாதம் ஒருமுறை மாணவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாணவர்களை நேரடியாக உயர்கல்வியில் சேர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி