நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே. பாலகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் பணிகளில் காவலர்கள் எவ்வாறு திறம்பட செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். மேலும், பல்வேறு குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் நேரில் வெகுமதி வழங்கி பாராட்டினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. S. பாலகிருஷ்ணன் உடனிருந்தார்.