மயிலாடுதுறை: கடன் வசூலில் மோசடி செய்த வங்கி ஊழியா் கைது

மயிலாடுதுறை அருகே மொழையூரை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(34). இவர் மயிலாடுதுறையில் தனியார் வங்கியில் வசூல் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த வங்கியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் தனிநபர் கடன் பெற்றவர்களிடமிருந்து கடன் தவணை தொகை வசூல் செய்யும் பணியில் இருந்த தமிழ்செல்வன், வசூலித்த பணத்தை சரிவர வங்கியில் செலுத்தவில்லை என்ற புகார் இருந்தது. 

இதையடுத்து, வங்கி நிர்வாகத்தினர் நடத்திய விசாரணையில், தமிழ்செல்வன் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த கடன் தவணைத்தொகையில் ரூ. 5,16,332-ஐ கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து, வங்கி மேலாளர் வினோத் ஜூலை 11-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் அன்னக்கொடி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, குற்றம் உறுதியானதைத் தொடர்ந்து தமிழ்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி