நாகை: யாகசாலை பூஜையில் தர்மபுரம் ஆதீனம் பங்கேற்பு - வீடியோ

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடைவீதியில் உள்ள ஆதி ராகு ஸ்தலமான ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தர்மபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் சார்பில் ஆதீனத்திற்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருந்து சாத்தும் வைபவத்தில் பங்கேற்றார்.

தொடர்புடைய செய்தி