மயிலாடுதுறையில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம், ஆன்லைன் மருந்து விற்பனையை நிறுத்த வலியுறுத்தி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு தழுவிய அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஆன்லைன் மூலம் வாங்கப்படும் மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சுமார் 650 மருந்து கடைகள் இந்த போராட்டத்தால் அடைக்கப்பட்டன.