டிட் வா புயல் காரணமாக பெய்த கனமழையால் கூரை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.கே.ஜி.ஏ. சேகர் தலைமையில் கட்சியினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினர். 2017ல் கட்டப்பட்ட பிரதம மந்திரி வீடுகள் முழுமையடையாதது குறித்தும், விவசாய நிலங்களுக்கு செல்லும் வடிகால் வாய்க்கால் பாலம் சிதிலமடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.