சீர்காழி: இடிந்து விழும் நிலையில் அரசு கட்டிடம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்தில் ரேஷன் கடை மற்றும் அலுவலகம் இயங்கி வருகிறது. 40 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிந்த வண்ணம் உள்ளது. மேலும் சுற்றுப்புறச் சுவர்களிலும் விரிசல் விழுந்து இடிந்து விடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி