நாகை: காமாட்சி அம்மன் கோயில் உண்டியலை உடைத்து ரூ.6000 திருட்டு

வாய் மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட செட்டியார் குத்தகை பகுதியில் உள்ள ஆனந்த காமாட்சி அம்மன் கோவிலில், கடந்த 19ஆம் தேதி இரவு பூஜை முடிந்து நடை சாத்தப்பட்டது. மறுநாள் காலை பூசாரி செல்வராஜ் வந்தபோது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த சுமார் 6000 ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அறங்காவலர் திருநாவுக்கரசு வாய்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி