கோடியக்கரை: கடலில் விடப்பட்ட 104 ஆமை குஞ்சுகள்

கோடியக்கரை பொரிப்பகத்தில் 38 ஆமைகளின் முட்டைகள் மண்ணில் பாதுகாக்கப்பட்டன. 45 நாட்களுக்கு முன் வைக்கப்பட்ட முட்டையிலிருந்து 104 கடல் ஆமைக்குஞ்சுகள் வெளிவந்தன. நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் ரமேஷ்வரன், கோடிக்கரை புதிய கலங்கரை விளக்க கடற்கரையில் இந்த ஆமை குஞ்சுகளை கடலில் விடுவித்தார். ஆமை குஞ்சுகள் கடல் நீரில் நீந்தி கடற்பரப்பிற்குள் சென்றன. இந்த பணியில் ஆமை முட்டை சேகரிப்பு பணியாளர்கள் மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி