தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் முக்கூட்டு சாலை பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் திருநாவுக்கரசு (65).
இந்நிலையில் இவரது கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் மதுக்கூர் சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆய்வு செய்ய சென்றுள்ளார். அப்போது கடையில் ஹான்ஸ் பொருட்கள் உள்ளதா என கடை உரிமையாளர் திருநாவுக்கரசிடம் கேட்க, அவர் மறுத்து விட உடனே எஸ்.ஐ. ஜீவானந்தம் ஹான்ஸ் பொருளை எடு என்று சொல்லி கடையின் உரிமையாளரை தாக்குவதும், உடனே கடை உரிமையாளர் திருநாவுக்கரசு எஸ்ஐ ஜீவானந்தத்தின் காலில் விழுந்து கெஞ்சுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்ஐ ஜீவானந்தத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.