தஞ்சை அருகே டிராக்டரில் சிக்கி விவசாயி பலி

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் திங்கள்கிழமை இரவு இரு டிராக்டர்களுக்கு இடையே பைக் சிக்கியதில் விவசாயி உடல் நசுங்கி உயிரிழந்தார். பாபநாசம் அருகே வளர்த்தாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ராஜன் (33). விவசாயியான இவர் திங்கள்கிழமை இரவு பாபநாசத்தில் இருந்து பைக்கில் ஊருக்குத் திரும்பும் வழியில் பாபநாசம் - சாலியமங்கலம் பிரதான சாலையில் பாபநாசம் ஆர்டிபி கல்லூரிக்கு அருகே வந்தார். அப்போது முன்னால் சென்ற டிராக்டரை ராஜன் முந்த முயன்றபோது எதிரே வந்த டிராக்டருக்கும் முன்னால் சென்ற டிராக்டருக்கும் இடையே அவர் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். 

தகவலறிந்து வந்த பாபநாசம் போலீசார் ராஜனின் உடலை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து ராஜனின் சித்தப்பா என். ஜெயக்குமார் (65) கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி