நாகை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. குறிப்பாக நாகை நகர், திருமருகல், திட்டச்சேரி, கீழ்வேளூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்தன.

தொடர்புடைய செய்தி