நாகையில் கடல் கடும் சீற்றம்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வங்காள விரிகுடா, பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாகை மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கடலுக்குச் சென்ற விசைப்படகுகள் துறைமுகத்தை நோக்கி கரை திரும்பி வருகின்றன. கரை திரும்பிய படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி