நாகை: தடுப்படைக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம்

நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் ஊராட்சி நரிமணம் பகுதியில் கடல் நீர் உப்புகாமல் தடுப்பதற்கு தடுப்பணை கட்ட வேண்டும் என சுமார் ஒன்பது கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தமிழக அரசு தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது. 

இந்த நிலையில் நறுமணம் தெற்கு பகுதியில் கட்ட வேண்டிய தடைப்படையை மூன்று கிலோமீட்டர் தூரம் தள்ளி உத்தமசோழபுரம் மேற்கு பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுதல், ஆற்றில் இறங்கி போராடுதல், தடுப்பணை பணிகள் நடைபெறும் இடத்தில் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி