இந்த தையல் பயிற்சி வகுப்பு ஒரு மணி நேரத்துக்கு 5-பேர் வீதம் தினமும் 50 - பேருக்கு தையல் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும் அழகுகலை பயிற்சி மற்றும் எம்ப்ராய்டரிங் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
இதில் பயிற்சியாளர் கங்களாஞ்சேரி ஓம் சக்தி டிரஸ்டின் நிர்வாகி ஜெயந்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயபால், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.