நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற வியாழக்கிழமை, 04.06.2026 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தப. ஆகாஷ் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.