தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியான விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடுத்திட வலியுறுத்தியும் பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் கூட்டு இயக்கம் சார்பில் நாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தினர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில், அனுமதி மீறி சென்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.