பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர், வ. ப. வணந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் கே சின்னையன் சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். உலகளாவிய பிளாஸ்டிக் பயன்பாட்டினை முடிவுக்குக் கொண்டு வருதல் என்ற இவ்வருட ஐநா சபையின் குறிக்கோளின் படி மாணவர்கள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிச் சென்றனர். பேரணியில் சமூக ஆர்வலர் மீரா சரஸ்வதி, சுற்றுச்சூழல் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், தேசிய பசுமைப்படை ஆசிரியை மங்கலம், மாவட்ட ஆட்சியரக பசுமை கண்காணிப்பாளர் டிவைனியா மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் செய்திருந்தார்.
தமிழகத்தில் குளிர் தொடரும்: அதிகாலை பனிப்பொழிவு