தமிழகத்தில் எபோலா வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, சூடான் போன்ற பகுதிகளில் பரவி வரும் எபோலா வைரஸ் நோய் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஏராளமான சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு எபோலா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக கலந்தாலோசித்தனர்.