அங்கு, சிறுமியின் வயதை உறுதி செய்த மருத்துவர்கள், மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சைல்ட் லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஆரோக்கியராஜ் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுகந்தி, போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, முருகதாசை கைது செய்தார். தொடர்ந்து, மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.