உலக கடற்புற்கள் தின விழா

நாகப்பட்டினம் வனக்கோட்டம், வேதாரண்யம் வனச்சரகம் சார்பில் கோடியக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக கடற்புற்கள் தின விழா கொண்டாடப்பட்டது. வன உயிரினக் காப்பாளர் திரு. D. ரமேஷ்வரன் IFS. தலைமை வகித்தார். வனச்சரக அலுவலர் திரு. ஆ. ஜோசப் டேனியல் முன்னிலை வகித்தார். வன உயிரின ஆராய்ச்சியாளர் முனைவர் சிவகணேசன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. வெற்றிவேலன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். சூழல் மண்டலத்தில் கடற்தாழைகளின் பங்களிப்பு, உணவுச் சங்கிலியில் கடல் புற்களின் முக்கியத்துவம், பல்லுயிரினப் பெருக்கத்தில் கடல் புற்களின் பங்கு ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டது.

தொடர்புடைய செய்தி