தேவூரில் குடிநீர் குழாயில் உடைப்பு; வீணாகும் குடிநீர்

நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இந்த குழாய் மூலம் கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு, வேதராண்யம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குழாய் உடைப்பால் இப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், சமூக ஆர்வலர்கள் விரைந்து சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி