இந்நிலையில், இந்த குளத்தில் கடந்த சில வாரங்களாக முதலை நடமாட்டம் தென்படுகிறது. பகல் பொழுதில் முதலை கரையில் படுத்துகிடப்பதும், இரவு நேரங்களில் அருகில் உள்ள பகுதிக்கு வந்து செல்வதுமாக உள்ளது. இந்த குளத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். குழந்தைகள் தெருக்களில் விளையாடி வரும் நிலையிலும், பொதுமக்கள், கால்நடைகள் குளத்தை பயன்படுத்திவரும் நிலையில், குளத்தில் முதலை இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறை உடனடியாக முதலையை பிடித்து, வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் விட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?