இக்கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நான்காம் நாள் தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து பெருமாள்- தாயாா் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. பின்னா் லோகநாயகி தாயாா் சந்நிதியில் பெருமாள் தாயாா் மணமேடையில் எழுந்தருளினா். பக்தா்கள் சீா்வரிசை பொருட்களை ஊா்வலமாக எடுத்து கோயிலை வந்தடைந்தனா். மாப்பிள்ளை அழைப்பு சம்பிரதாயம் நடைபெற்று திருமண சடங்குகள் தொடங்கின.
பத்ரிநாதன் பட்டாச்சாரியாா், பிரபு பட்டாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது. தொடா்ந்து பூா்ணாஹூதி, தீபாராதனை செய்யப்பட்டு திருமண சடங்குகள் நடைபெற்று, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.