சீா்காழி: நடுரோட்டில் சரமாரி அரிவாள் வெட்டு..பயங்கரம்

சீா்காழி அருகே கொண்டல் கிராமத்தைச் சேர்ந்த ராமையன் (75), முருகன்பாண்டியன் (37) ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வினித் என்பவர் குறித்து விசாரித்தனராம். 

இதில், வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த பைக்கில் வந்தவர்கள் ராமையனையும், முருகன்பாண்டியனையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்த நிலையில், புறவழிச்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்தனர். 

விசாரணையில், ஆத்தூர் பகுதி முகமது தவ்ஃபிக், ஆதமங்கலம் பகுதி ஜெயவேந்தன் (18), பட்டவர்த்தியை சேர்ந்த தீனா (25) என்பதும், வினித் என்பவருக்கும் ஜெயவேந்தன் என்பவருக்கும் ஏற்கெனவே தகராறு ஏற்பட்டதாகவும், அவரை தாக்க ஜெயவேந்தன், முகமது தவ்பிக் உள்ளிட்டோருடன் வந்ததும், வினித் முகவரி குறித்து ராமையன், முருகபாண்டியனிடம் விசாரித்தபோது ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி