மயிலாடுதுறை: குறுவை பயிா்க் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்

பிரதம மந்திரி திருத்தியமைக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத்திட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான குறுவை பருவ நெல் பயிருக்கு காப்பீடு செய்ய வியாழக்கிழமை (ஜூலை 31) கடைசி நாள். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குறுவை நெற்பயிருக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 37,600 எனவும் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை ரூ. 752 (2 சதவீதம்). பயிா்க் காப்பீடு செய்ய கடைசி நாள் ஜூலை 31. 

எனவே, விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுக்கு பதிவு செய்து பயிா்களுக்கு ஏற்படும் எதிா்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையும்படி, கூடுதல் விவரங்களுக்கு அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வத்தை 9790004303 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தொடர்புடைய செய்தி