மயிலாடுதுறையில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் புகழ்பெற்ற துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெற்றது. வதான்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற இந்த விழாவில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க, பெண்கள் சீர்வரிசை எடுத்து வர மாலை மாற்றுதல் மற்றும் மாங்கல்யதாரணம் நடைபெற்றது. தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாள் வீதியுலாவாக எழுந்தருளினர்.