மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மணிவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில், இரண்டு பேருக்கு 80 வயது சதாபிஷேகமும், 15 பேருக்கு 60 வயது மணிவிழாவும் நடத்தப்பட்டது. மேலும், 27 இணையர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆதிசைவ அந்தணர்க்கு ஆயிரம் படிக்காசு திட்டத்தின் கீழ் நூறு அர்ச்சகர்கள், சிவாச்சாரியார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மற்றும் பூஜைக்கான நிதி உதவி வழங்கப்பட்டது. திருக்கோவில் பூசாரிகளுக்கும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஜப்பான் சிவ ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ பாலகும்ப குருமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருமணம் செய்து கொண்ட இணையர்களுக்கு கட்டில், மெத்தை, பீரோ மற்றும் சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. ஜப்பான் நாட்டவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.