சீர்காழி: கல்லாப்பெட்டியில் பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகள் வைரல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூளக்காடு பகுதியில் உள்ள தனியார் காபி கஃபே ஒன்றில், பொருட்கள் வாங்குவது போல் வந்த நபர் ஒருவர், உரிமையாளர் மற்றும் பணியாளர்களின் கவனத்தை திசை திருப்பி கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றார். இந்த திருட்டு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி