மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றின் கரையில் உள்ள சுடுகாடு கொட்டகைக்குச் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் மின்விளக்கு எரியவில்லை. இதுகுறித்து மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என சட்டநாதபுரம் மக்கள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் சுடுகாட்டிற்குச் செல்லும் வழியில் மின்விளக்கு இல்லாதது அப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.