மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் கடை வீதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக சட்டமன்ற உறுப்பினருக்கு சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.