மயிலாடுதுறை: போதைப் பொருள் விற்பனை செய்த கடைக்கு சீல்

மயிலாடுதுறை நகர் பகுதிகளில் பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், காவல்துறையினர் ஒருங்கிணைந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மயிலாடுதுறை நகரில் உள்ள வள்ளலார் கோவில் அருகே ஹான்ஸ் விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இது போன்ற விற்பனையில் ஈடுபடக்கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி