ஆசிரியர்களுக்கு ஆதரவாக SFI மாணவர்களும் போராட்டம்

நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் 18.02.2026 முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த ரூ. 57,700 ஊதியம், 12 மாத ஊதியம், மகப்பேறு விடுப்பு, இறப்புக்கால நிதி, சேம நல நிதி உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் இணைந்ததால், தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகள் முடங்கியுள்ளன. நாகை மாவட்டத்தில் 35 கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி