சீர்காழி அருகே புத்தூரில் பழையபாளையத்தான் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரத்தையும் பாதிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொள்ளிடம் அருகே மதகடியில் இருந்து பிரதான புது மண்ணியாற்றிலிருந்து பிரிந்து செல்லும் இந்த வாய்க்காலில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.