சாலை விரிவாக்க பணி தீவிரம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் இருந்து ஆடுதுறை வரை செல்லும் சாலை குறுகியதாக இருந்ததால் போக்குவரத்து வாகனங்கள் சிரமத்திற்குள்ளாகின. இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, சாலையின் இருபுறமும் உள்ள மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விரிவாக்கப் பணி வாகனப் போக்குவரத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி