வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், தூர்வாரப்படாத வடிகால் வாய்க்கால்களில் தேங்கியுள்ள தண்ணீர் காரணமாக திருவிடைக்கழி பகுதியில் சுமார் 300 ஏக்கரில் சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கடந்த மாதம் பெய்த மழையில் அழிந்த பயிர்களுக்கு விவசாயிகள் இரண்டாவது முறையாக நேரடி விதைப்பு செய்திருந்த நிலையில், தற்போது அந்தப் பயிரும் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.