மயிலாடுதுறை: ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தரங்கம்பாடி ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் 43ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் கலந்துகொண்டு 90 வயதுக்கு மேற்பட்ட மூத்த உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி